கலெக்டர் அலுவலகத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வந்த பொதுமக்கள்


கலெக்டர் அலுவலகத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 26 April 2022 2:12 AM IST (Updated: 26 April 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

மின் இணைப்பு கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர்.

-சேலம்:-
மின் இணைப்பு கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர்.
வீட்டுமனை பட்டா
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்களில் சிலர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ராஜீவ்காந்தி நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இதில் பலரது வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காததால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். மேலும் நாங்கள் வீட்டுமனை பட்டா மற்றும் மின் இணைப்பு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் வீட்டுமனை பட்டா மற்றும் மின் இணைப்பு கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தண்ணீர் திறந்துவிடுவதில்லை
கெங்கவல்லி நடுவலூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊரில் தான் மேட்டூர் நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. ஆனால் எங்களுக்கு சீராக தண்ணீர் திறந்துவிடுவதில்லை.
இதனால் நாங்கள் குடிநீருக்காக மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். மேலும் நெடுஞ்சாலை பகுதிக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சீராக தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story