மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு வெங்கடாஜலம் வேட்புமனு தாக்கல்


மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு வெங்கடாஜலம் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 26 April 2022 2:13 AM IST (Updated: 26 April 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வெங்கடா ஜலம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சேலம்:-
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வெங்கடா ஜலம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல்
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் பொறுப்பாளர்களான அமைப்பு செயலாளர் சின்னசாமி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் செயல்பட்டனர். அவர்களிடம் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போதைய மாநகர் மாவட்ட செயலாளருமான ஜி.வெங்கடாஜலம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து அவைத்தலைவர் பதவிக்கு முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், இணை செயலாளர் பதவிக்கு உமாராஜ், துணை செயலாளர்கள் பதவிக்கு லட்சுமி, சவுண்டப்பன் ஆகியோர் மனு தாக்கல்செய்தனர்.
பொருளாளர் பதவி
பொருளாளர் பதவிக்கு பங்க் வெங்கடாஜலம், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஜான்கென்னடிமற்றும் 12 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், பகுதி செயலாளர்கள் யாதவமுர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் வேபிரிட்ஜ் ராஜேந்திரன், சதீஷ்குமார், ராம்ராஜ், கே.சி.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கனகராஜ்உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story