பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது


பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 26 April 2022 2:13 AM IST (Updated: 26 April 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்த நிலையில் பிளஸ்-2 செய்முறை மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான செய்முறை தேர்வு நடந்தது. செய்முறை தேர்வு 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காலை 8 மணி முதல் 10 மணி வரையும், 10.15 மணி முதல் 12.15 மணி வரையும், 12.45 மணி முதல் 2.45 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையும் நடத்தப்பட்டது. இதில் 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த செய்முறை தேர்வில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதை பள்ளி முதல்வர் தமிழ்வாணி கண்காணித்தார். செய்முறை தேர்வு வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story