மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:-
டெல்லி உள்பட வட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று புதிதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story