கொடுமுடி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர்


கொடுமுடி அருகே  குடியிருப்பு பகுதியில் புகுந்த கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர்
x
தினத்தந்தி 26 April 2022 2:27 AM IST (Updated: 26 April 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி அருகே கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது.

கொடுமுடியை அடுத்த சோளக்காளிபாளையம் அருகே சிட்டபுள்ளாபாளையம் செல்லும் வழியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் அகலம் மிகவும் குறைவாகவும், சோளக்காளி பாளையத்தில் இருந்து சிட்டபுள்ளாபாளையம் செல்லும் வழியில் உள்ள தார் சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயின் அளவு மிகவும் குறுகியதாகவும் உள்ளது.
இதனால் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் போது வாய்க்காலில் தண்ணீர் தேங்கி அதிலிருந்து வழிந்து அருகில் உள்ள வயல்வெளிகளிலும், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. அதேபோல் நேற்று காலை வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருந்தது. இதனால் வாய்க்காலில் இருந்து தண்ணீர் வழிந்து அருகே உள்ள வயல்வெளிகளில் புகுந்தது. மேலும் வாய்க்காலையொட்டி உள்ள ஒரு வீட்டையும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோளக்காளிபாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story