ஈரோட்டில் சேவல் வைத்து சூதாடிய 8 பேர் கைது


ஈரோட்டில் சேவல் வைத்து சூதாடிய 8 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 2:33 AM IST (Updated: 26 April 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சேவல் வைத்து சூதாடிய 8 பேரை போலீசாரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.24 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோட்டில் சேவல் வைத்து சூதாடிய 8 பேரை போலீசாரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.24 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டன.
சேவல் வைத்து சூதாட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம் வெற்றி நகர் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிலர் கும்பலாக சேவல் வைத்து சூதாடுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
8 பேர் கைது
விசாரணையில் அவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகரை சேர்ந்த முகமது அப்பாஸ் (வயது 20), வாசுகி வீதியை சேர்ந்த ஜீவானந்தம் (43), ராமமூர்த்தி நகரை சேர்ந்த கர்ப்பகராஜன் (34), சுக்கிரமணிய கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (21), குணசேகர் (21), அசோகபுரம் பகுதியை சேர்ந்த ரோகித் (23), காவிரிக்கரை பகுதியை சேர்ந்த அரவிந்தன் (23), நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த முரளி (28) ஆகியோர் என்பதும், இவர்கள் சேவல் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள், 9 சேவல்கள் மற்றும் ரூ.24 ஆயிரத்து 600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story