கார் மீது மரம் விழுந்தது; தந்தை-மகள் சாவு


கார் மீது மரம் விழுந்தது;  தந்தை-மகள் சாவு
x
தினத்தந்தி 26 April 2022 2:36 AM IST (Updated: 26 April 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

ராமநகரில் கார் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் தந்தை-மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு: 

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ராமநகர் அருகே கும்பாபுரா கேட் என்ற பகுதி உள்ளது. நேற்று இப்பகுதியில் ஒரு ஆம்னி கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலையோரமாக இருந்த ராட்சத மரம் ஒன்று திடீரென முறிந்து காரின் மீது விழுந்தது. இதில் காரில் சென்ற 4 பேர் இடிபாடுகளில் சிக்கினர். இதுபற்றி அறிந்ததும் ராமநகர் போலீசார் அங்கு சென்று காருக்குள் இருந்த 4 பேரையும் மீட்க முயன்றனர். 

அப்போது 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. 2 பேர் படுகாயம் அடைந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெயர்கள் சுந்தரேஷ் (வயது 49), அவரது மகள் தன்மயி (10) என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்தவர்கள் சுந்தரேசின் மனைவி, இன்னொரு மகள் என்பதும் தெரியவந்து உள்ளது.

Next Story