கர்நாடகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று 4,637 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 64 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தட்சிண கன்னடாவில் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. நேற்றும் யிரிழப்பு இல்லை.
இதுவரை 39 லட்சத்து 46 ஆயிரத்து 998 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 57 பேர் இறந்து உள்ளனர். நேற்று 69 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 39 லட்சத்து 5 ஆயிரத்து 228 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1,671 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு 1.38 சதவீதமாக உள்ளது.
Related Tags :
Next Story