வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார்


வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார்
x
தினத்தந்தி 26 April 2022 2:44 AM IST (Updated: 26 April 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் வாகன ஓட்டிகளிடம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ்காரர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

துமகூரு:

துமகூரு மாவட்டம் சிரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்கவும், வழிபறியை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை ரோந்து  போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரா நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அந்த வழியாக பகலில் வரும் டிராக்டர், லாரி, சரக்கு வாகனங்களை வழிமறித்து கூடுதல் பாரம் ஏற்றி செல்வதாக மிரட்டி ரூ.500 முதல் ரூ.1,000 வரை லஞ்சம் வாங்கி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் சிரா நெடுஞ்சாலை ரோந்து போலீசார், வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story