செய்முறை தேர்வுகள் தொடங்கியது


செய்முறை தேர்வுகள் தொடங்கியது
x
தினத்தந்தி 26 April 2022 2:59 AM IST (Updated: 26 April 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கியது.

பெரம்பலூர்:

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் (மே) 5-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு மே 6-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு மே 10-ந்தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இதையொட்டி 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கியது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வும் தொடங்கியது. மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் சுழற்சி முறையில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செய்முறை தேர்வு நடந்து வருகிறது.
இதில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தாவரவியல், விலங்கியல், உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கும், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டு அறிவியல், தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வும் நடந்தது. செய்முறை தேர்வினை மற்ற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வந்து கண்காணித்தனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். வருகிற 2-ந் தேதி வரை செய்முறை தேர்வு நடக்கிறது.

Next Story