டிரான்ஸ்பார்மரை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சாவு


டிரான்ஸ்பார்மரை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சாவு
x
தினத்தந்தி 26 April 2022 8:24 AM IST (Updated: 26 April 2022 8:24 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே டிரான்ஸ்பார்மரை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்குன்றம், 

செங்குன்றத்தை அடுத்த பொத்தூர் மேட்டு காலனியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 42). இவர், புழல் மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை புழல் அம்பேத்கர் நகரில் மின்சாரம் தடைபட்டதால் சந்தோஷ், அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இதேபோல் நெற்குன்றம், கஜலட்சுமி நகரில் சிவகாமி என்பவரது வீட்டின் முதல் தளத்தில் புதிதாக வீடு கட்டும் பணியில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் இரும்பு கம்பி அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதால் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த கோவிந்தராஜ் (60), வினோத் (36), முருகன் (35), ஏழுமலை (36) ஆகிய 4 பேரையும் மின்சாரம் தாக்கியது. காயம் அடைந்த 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Next Story