நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முற்றுகை


நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 26 April 2022 8:31 AM IST (Updated: 26 April 2022 8:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

சென்னை, 

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், ஓய்வூதியதாரர்கள் பலர் நிரந்தர வைப்பு நிதியாக பணம் செலுத்தி இருந்தனர். அவர்கள் செலுத்திய பணத்துக்கு, மாதந்தோறும் வட்டி பணம் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஓராண்டாக வட்டி பணத்தை நிதி நிறுவனம் வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த 1-ந் தேதி நிதி நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. இதனால், பணத்தை இழந்த 100-க்கும் மேற்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று குவிந்தனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “இந்த நிதி நிறுவனம் ரூ.108 கோடி மோசடி செய்துள்ளது. எனவே, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். 

இந்நிலையில், இந்த புகார் மனுக்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.

Next Story