தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல் - கலெக்டர் உத்தரவு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளூர்,
தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003-ன் படி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை கடைகள் மற்றும் அதனை சார்ந்த மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்றுள்ள மதுக்கூடங்கள், மதுக்கூடங்களில் இயங்கி வரும் பார்கள் ஆகியவற்றை வருகின்ற 1-ந் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூட வேண்டும். தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story