மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 26 April 2022 6:55 PM IST (Updated: 26 April 2022 6:55 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

திண்டுக்கல்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

 இதில் மொத்தம் 4 பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், நின்று கொண்டு தாண்டுதல், எறிப்பந்து, கபடி, கையுந்து பந்து, இறகுபந்து, சக்கர நாற்காலி பந்தயம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த விளையாட்டு போட்டிகளை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமாமேரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன், செயலாளர் சண்முகம், கூடைப்பந்து கழக தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story