கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த ஊட்டி கோர்ட்டு நீதிபதி சஞ்சய் பாபா பணியிட மாற்றம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த ஊட்டி கோர்ட்டு நீதிபதி சஞ்சய் பாபா பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய நீதிபதி முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த ஊட்டி கோர்ட்டு நீதிபதி சஞ்சய் பாபா பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய நீதிபதி முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோடநாடு கொலை வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள, முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை மாவட்ட நீதிபதி வடமலை விசாரித்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அவர் மதுரைக்கு மாற்றப்பட்டார்.
நீதிபதி இடமாற்றம்
இதையடுத்து கோவையில் இருந்து ஊட்டி நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் கோடநாடு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் கோடநாடு வழக்கை விசாரித்து வந்த ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக, சென்னையில் தொழில் தகராறு வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story