கொளப்பள்ளி அருகே விபத்துக்கு வழிவகுக்கும் குடிநீர் தொட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?


கொளப்பள்ளி அருகே விபத்துக்கு வழிவகுக்கும்  குடிநீர் தொட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?
x
தினத்தந்தி 26 April 2022 7:25 PM IST (Updated: 26 April 2022 7:25 PM IST)
t-max-icont-min-icon

கொளப்பள்ளி அருகே விபத்துக்கு வழிவகுக்கும் குடிநீர் தொட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

பந்தலூர்

கொளப்பள்ளி அருகே விபத்துக்கு வழிவகுக்கும் குடிநீர் தொட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

குடிநீர் தொட்டி

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே குறிஞ்சிநகரில் அண்ணாசிலையிலிருந்து படச்சேரி வழியாக சேரங்கோடு மற்றும் சேரம்பாடிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்களும் உள்ளன. 
இதனால் தினமும் ஏராளமான தனியார் வாவாகனங்களும் பள்ளி கல்லூரி வாகனங்களும், தேயிலை மூட்டைகளை பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களும் ஆட்டோகளும் வந்து செல்கின்றன. இந்த சாலை குறுகிய சாலையாகவும் உள்ளது. இந்தநிலையில் சாலையோரத்தில் சேரங்கோடு ஊராட்சி சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து நெரிசல்

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தினமும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக அந்த குடிநீர் தொட்டி விபத்துக்கு வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தியது. மேலும், அவசர தேவைகளுக்கு நோயாளிகளையும், கர்பிணிகளையும் ஏற்றிசெல்லும் ஆம்புலன்சுகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியால் அவதிப்படுகின்றனர் தேயிலை மூடைகளை ஏற்றிசெல்லும் லாரிகளும் நெரிசலிலும் சிக்கிகொள்கிறத. மேலும் சமூக விரோத கும்பல்கள் மது அருந்தி விட்டு குடிநீர் தொட்டியின் அருகே வீசிவிட்டு செல்கின்றனர்.  அதனால் அந்த குடிநீர் தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Next Story