ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் கருடசேவை


ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் கருடசேவை
x
தினத்தந்தி 26 April 2022 8:19 PM IST (Updated: 26 April 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் இரவு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் கடந்த 21-ந் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிக்கு மங்களாசாசனம், சேஷ வாகனத்தில் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 5-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சுவாமி கள்ளர்பிரான், காசினி வேந்தபெருமாள், விஜயாசன பெருமாள், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. 10.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடும், மாலை 4 மணிக்கு திருமஞ்சனம் தீர்த்த வினியோக கோஷ்டியும் நடந்தது.

தொடர்ந்து கோவிலில் இருந்து 4 கருட வாகனங்களில் சுவாமி கள்ளர்பிரான், ஸ்ரீபொலிந்துநின்றபிரான், காசினி வேந்த பெருமாள், விஜயாசன பெருமாள் எழுந்தருளி வீதிஉலா புறப்பட்டனர். பின்னர் இரவு 1 மணிக்கு மேடை பிள்ளையார் கோவில் எதிரே 4 பெருமாள்களுக்கும், ஹம்ச வாகனத்தில் வந்த நம்மாழ்வாருக்கும் எதிர்சேவை நடைபெற்றது. அப்போது சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் ‘கோவிந்தா கோபாலா’ என கூறியபடி சாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத், ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story