போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா


போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா
x
தினத்தந்தி 26 April 2022 8:23 PM IST (Updated: 26 April 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தாா்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகிய 7 உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் பயன்படுத்தும் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங் களை அவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா? என்று போலீஸ் சூப்பிரண்டு மாதந்தோறும் ஆய்வு செய்வது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வு பணி நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் அந்த வாகனங்களை ஆய்வு செய்வதற்காக கடலூர் ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் போலீசார் பயன்படுத்தும் இரு மற்றும் 4 சக்கர வாகனங்கள் கடலூர் ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டது.
இந்த வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா? என்றும், வாகனங்களின் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ரகுபதி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story