இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது


இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 8:33 PM IST (Updated: 26 April 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் தனியார் ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

சிதம்பரம், 

புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் இருந்த இரும்பு பொருட்களை மர்மநபர்கள் யாரோ நள்ளிரவு நேரத்தில் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆலப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த மாயவன் மகன் மாதவன் (வயது 26) என்பவர், இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மாதவனை போலீசார் கைது செய்தனர்.

Next Story