ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது


ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 8:37 PM IST (Updated: 26 April 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேட்டவலம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த ஓலைப்பாடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி தீர்மான நோட்டில் இருந்ததை படித்துக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சென்ட்ரிங் தொழிலாளி உத்தமன் (35), பழ வியாபாரி சக்திவேல் (45) ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவரை படிப்பதை சத்தம் போட்டு இடையூறு செய்தனர். இதை கண்டித்த ஊராட்சி மன்ற தலைவரை, அவர்கள் இருவரும் அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து வேட்டவலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தமன், சக்திவேல் ஆகியோரை கைது செய்து திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story