தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த பாம்பு


தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த பாம்பு
x
தினத்தந்தி 26 April 2022 9:18 PM IST (Updated: 26 April 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த பாம்பு பிடிபட்டது.

போடி:
போடி அருகே உள்ள ரங்கநாதபுரம், காந்திநகர் முதல் தெருவில் வசிப்பவர் கண்ணன். இவர் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். 
அந்த வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் நேற்று காலை பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்ணன் பார்த்தார். உடனே இதுகுறித்து அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது. 

Next Story