நீர்பெருந்தகை ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி


நீர்பெருந்தகை ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 26 April 2022 9:52 PM IST (Updated: 26 April 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

நீர்பெருந்தகை ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியம் நீர்பெருந்தகை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. 

இக்கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்களான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், 

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகர பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம், முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.


மேலும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியை நீர்பெருந்தகை ஊராட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Next Story