பா.ஜனதா அரசின் நோட்டீசுக்கு காங்கிரஸ் பயப்படாது- யு.டி காதர் பேட்டி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பா.ஜனதா அரசு வழங்கிய நோட்டீசுக்கு காங்கிரஸ் பயப்படாது என்று எதிர்க்கட்சி துணை தலைவர் யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.
மங்களூரு:
யு.டி.காதர் பேட்டி
மங்களூரு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சி துணை தலைவருமான யு.டி.காதர் மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பான ஆடியோவை பிரியங்க் கார்கே வெளியிட்டுள்ளார். ஆனால் பா.ஜனதா அரசு தன் தோல்வியை மறைக்க பிரியங்க் கார்கேவுக்கு நோட்டீசு வழங்கி உள்ளது. இதற்கு எல்லாம் காங்கிரஸ் பயப்படாது. பிரியங்க் கார்கே தனக்கு கிடைத்த ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
இதற்காக நோட்டீசு அனுப்புவது எந்த வகையில் நியாயம். பா.ஜனதா அரசுக்கு எதிராக யாராவது கருத்து தெரிவித்தாலே அவர்களுக்கு நோட்டீசு கொடுப்பது வழக்கமாக உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் போலீஸ் விசாரணை சரிவர நடப்பது கிடையாது.
தேசப்பற்று
ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் அக்சய் திருதியன்று முஸ்லிம் வியாபாரிகளின் நகை கடையில் நகைகள் வாங்க கூடாது என்று கூறியுள்ளார். இவர் பேசியது பிரச்சினை இல்லை. அவரை இவ்வாறு பேசவிட்டு அரசு வேடிக்கை பார்ப்பது தான் பிரச்சினை.
தேச பற்று கொண்ட யாரும் இதுமாதிரி பேசமாட்டார்கள். பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் தங்களிடம் தொடர்பில் உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். இது வதந்தி. கடலோர பகுதி மக்களுக்கு அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவர் வெறுமனே பேச மட்டும் தான் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story