சாலையோரத்தில் பூத்துக்குலுங்கும் சங்கு பூக்கள்
பெரும்பாறை பகுதியில் சாலையோரத்தில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
பெரும்பாறை:
பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி.பட்டி உள்ளிட்ட கீழ்மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில் காபி, வாழை, மிளகு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்களது தோட்டத்தின் எல்லையை தெரிந்து கொள்ளும் வகையிலும், யாரும் உள்ளே நுழைந்து விடாமல் தோட்டத்தை பாதுகாக்கும் வகையில் வேலி போலவும் சங்கு பூச்செடிகளை நடவு செய்துள்ளனர்.
தற்போது இந்த செடிகளில், சங்கு வடிவிலான பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ரோஸ், மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் பூத்துள்ள இந்த பூக்கள் காண்போரை கவரும் வகையில் உள்ளது.
சாலையோரத்தில் பூத்துக்குலுங்கும் இந்த பூக்களை, அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர். காலையில் மலர்ந்து மாலையில் இந்த பூக்கள் மடிந்தாலும், காண்போரின் மனம் மறக்க முடியாமல் தவிக்கிறது என்றால் அது மிகையல்ல.
Related Tags :
Next Story