சீதளாதேவி மாரியம்மன் கோவில் திருவிழா
ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கடையூர்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே ஆக்கூரில் மாரியம்மன் கோவில் வீதியில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மாலை 4 மணி அளவில் இரட்டைகுலகரையிலிருந்து பக்தர்கள் பால்காவடி, அலகு காவடி, பறவைக் காவடி எடுத்து மேளதாளம் முழங்க கடைவீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
தீ மிதித்து நேர்த்திக்கடன்
அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.பின்னா் இரவு 7 மணி அளவில் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி அம்மனுக்குநர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். அன்று இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story