திருவெண்ணெய்நல்லூர் அருகே வீடு புகுந்து 5¼ பவுன் நகை திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே வீடு புகுந்து 5¼ பவுன் நகை திருடியவா் கைது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகன் ஆனந்தராஜ். நேற்று முன்தினம் இரவு, மின்சாரம் இல்லாததால், வீட்டுக்கு வெளியே ஆனந்தராஜியும், அவரது மனைவி சங்கீதா வீட்டுக்குள்ளும் தூங்கினார்கள்.
இந்நிலையில் வீட்டு கதவு திறந்த நிலையில் இருந்ததை பயன்படுத்தி, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சங்கீதா கழுத்தில் இருந்த 1 பவுன் தாலி செயின், பீரோவில் இருந்த 4¼ பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஆனந்தராஜ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story