கர்நாடகத்தில் புதிதாக 85 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 85 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 April 2022 10:20 PM IST (Updated: 26 April 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 85 பேருக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் இன்று 7 ஆயிரத்து 171 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 82 பேருக்கும், துமகூருவில் ஒருவருக்கும், விஜயாப்புராவில் 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 70 பேர் குணம் அடைந்தனர். 1,686 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 

வைரஸ் தொற்றுக்கு புதிதாக யாருக்கும் இறக்கவில்லை. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 5 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 லட்சத்து 47 ஆயிரத்து 83 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.18 ஆகவும், வார பாதிப்பு விகிதம் 1.04 ஆகவும் உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 64 ஆக இருந்த நிலையில் அது இன்று சற்று அதிகரித்து 85 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story