மேல்மலையனூர் அருகே புகையிலை பொருட்களை எடுத்து வந்தவர் கைது


மேல்மலையனூர் அருகே புகையிலை பொருட்களை எடுத்து வந்தவர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 10:22 PM IST (Updated: 26 April 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே புகையிலை பொருட்களை எடுத்து வந்தவர் கைது செய்யப்பட்டாா்.


மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே வடுகப்பூண்டி-பூதமங்கலம் சாலையில் அவலூர்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பைகளோடு வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்கு உள்ளிட்ட 5 ஆயிரத்து 130 பாக்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.34 ஆயிரத்து 560 ஆகும். 

இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரித்த போது,  அவர் திருவண்ணாமலை மாவட்டம் பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் ஹரிகுமார் (வயது 40) என்பதும், அவர் மேல்மலையனூர் பகுதியில் விற்பனைக்காக அவற்றை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

 இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story