அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்
திருக்கடையூர்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சசிகலா நேற்று சாமி தரிசனம் செய்தார். முதலாவதாக விநாயகரை கும்பிட்ட அவர் தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. முன்னதாக, சசிகலாகோ பூஜை, கஜ பூஜை செய்தார். முன்னதாக, கோவிலுக்கு வந்த சசிகலாவுக்கு கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். கோவில் நிர்வாகம் சார்பாக நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
இதேபோல, பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலில் விநாயகர், நாகநாதசாமி, சவுந்தரநாயகி மற்றும் கேது பகவான் சன்னதிகளில் சசிகலா அர்ச்சனை செய்து வழிபட்டார். மேலும், கேதுபகவான் சன்னதியில் விளக்கு ஏற்றினார்.
Related Tags :
Next Story