சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
திருப்பூர்
சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
அவினாசி கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி தன்னுடன் வேலை செய்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவினாசி மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் ராஜேசை கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
20 ஆண்டு சிறை
குழந்தை திருமணம் செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ராஜேஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார்.
----
Reporter : M.Sivaraj_Staff Reporter Location : Tirupur - Tirupur
Related Tags :
Next Story