சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்
கொடைக்கானலுக்கு வருகி சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி தண்ணீரை குடித்து விட்டு, காலி பாட்டில்களை சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் ஆங்காங்கே வீசி செல்வது தொடர்கதையாகி விட்டது.
இதனை தடுக்கும் வகையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதை, கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் கொண்டு வருகிற பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுமட்டுமின்றி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், குழந்தைகளுடன் வரும்போது தண்ணீர் பாட்டில்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே தொட்டிகளை வைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story