பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கப்படுமா? சட்டசபையில் பண்ணாரி எம்.எல்.ஏ. கேள்வி
பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கப்படுமா? என்று சட்டசபையில் பண்ணாரி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபை நடந்து வருகிறது.இந்த நிலையில் சட்டசபையின் கேள்வி நேரத்தில் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. அ.பண்ணாரி, புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து பேசுகையில், 'முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் வருகிற 4-ந் தேதி இந்து சமய அறநிலைத் துறை மானியக் கோரிக்கையின்போது பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியிடப்படும். அப்போது உறுப்பினரின் மனம் குளிரும் வகையில் அறிவிப்புகள் இருக்கும்' என்றார்.
Related Tags :
Next Story