சங்கராபுரத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
சங்கராபுரத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
சங்கராபுரம்
சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா தனியார் மண்டபத்தில நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் பால்ராஜ், சிகாமணி, வெங்கடேசன், கவுரவ தலைவர் ரவி, துணைத்தலைவர் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் குசேலன் வரவேற்றார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், பள்ளி தாளாளர் துரைதாகப்பிள்ளை, நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்கத்தலைவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 35 பேருக்கு சீருடை வழங்கப்பட்டது. இதில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, சக்கரவர்த்தி, சி.சீனுவாசன், ஜெயினுலாப்தீன், பிரகாசம், தயானந்தன், சிவகடாட்சம், தெய்வமணி, தீனதயாளன், சையத்கவுஸ், நூர்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story