கோபி அருகே ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்படாமல் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு


கோபி அருகே  ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்படாமல் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 26 April 2022 10:49 PM IST (Updated: 26 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்படாமல் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 74.). இவர் சத்தியமங்கலம் நகராட்சியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வேலாயுதம் கடந்த 4-ந் தேதி ஒத்தக்குதிரையில் பணம் எடுக்க ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது எந்திரத்தில் பணம் வரும் இடத்தில் ரூ.10 ஆயிரம் இருந்ததை பார்த்தார். உடனே அந்த பணத்தை எடுத்து சென்று அது யாருடைய பணம் என்று விசாரித்தார். ஆனால் யாரும் பணத்துக்கு உரிமை கோரவில்லை.
இதனால் வேலாயுதம் பணத்தை கோபி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரிடம் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பணம் யாருடையது என்று விசாரித்து வந்தனர்.
விசாரணையில் ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்படாமல் விட்டுச்சென்ற ரூ.10 ஆயிரம் ஒத்தக்குதிரையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 51) என்பவருடையது என்பதும், ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை அவர் எடுக்காமல் சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் மற்றும் தட்சிணாமூர்த்தியை வரவழைத்து அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story