கொரடாச்சேரி:-
கொரடாச்சேரியில் வட்டார அளவிலாள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்த இந்த முகாமை மாவட்ட உதவி திட்ட அலுவலர் மு.பாலசுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கொரடாச்சேரி ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் விமலா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷெர்பின் அருள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ஆனந்தன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் மனநலம், பேச்சுத்திறன், செவித்திறன் குறைபாடு தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கேற்ப உதவி உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.