தேன்கனிக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பிரசாரம்


தேன்கனிக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பிரசாரம்
x
தினத்தந்தி 26 April 2022 11:28 PM IST (Updated: 26 April 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை:
மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குறைந்தப்பட்ச மாத ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பெண்களுக்கு பணி இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேன்கனிக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று சைக்கிள் பிரசாரம் தொடங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சேகர் சைக்கிள் பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கெலமங்கலம் செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் அனுமப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story