காவேரிப்பட்டணம் அருகே பயிர்களை சேதப்படுத்திய யானைகள்


காவேரிப்பட்டணம் அருகே பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
x
தினத்தந்தி 26 April 2022 11:29 PM IST (Updated: 26 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே பயிர்களை யானைகள் சேதப்படுத்தின.

காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே சாப்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட பனகமூட்லு கிராமத்தில் 3 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகளும் விவசாய நிலத்திற்குள் புகுந்து வாழை, தென்னை, நெல் பயிர்களை சேதப்படுத்தின. இதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story