நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடுவதை நிறுத்திய தொழிலாளர்கள்


நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடுவதை நிறுத்திய தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 26 April 2022 11:29 PM IST (Updated: 26 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

தக்கோலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடுவதை தொழிலாளர்கள் நிறுத்தினர்.

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய ஆன் லைனில் பதிவு செய்து பின்னர் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பதற்கு இங்கு கொண்டு வருகின்றனர். 

அப்போது விவசாயிகளிடம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அரசு வழங்கும் ரூ.10 போது மானதாக இல்லை. எனவே, 40 கிலோ எடை கொண்ட முட்டைக்கு ரூ.40 தர வேண்டும் என கேட்பதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் தர மறுத்ததால் எடை போடுவதை நிறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வெளியேறினர். இதனால் நெல் முட்டைகளுடன் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story