தாசிரிப்பள்ளியில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா அர்ஜூனன் தபசு நாடகம்


தாசிரிப்பள்ளியில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா அர்ஜூனன் தபசு நாடகம்
x
தினத்தந்தி 26 April 2022 11:29 PM IST (Updated: 26 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

தாசிரிப்பள்ளியில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் அர்ஜூனன் தபசு நாடகம் நடந்தது.

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி தினமும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அர்ஜூனன் தபசு நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் அர்ஜூனன் வேஷமிட்டு நாடக குழுவினர் மரத்தின் மீது ஏறி தவம் இருந்து கருடன் வந்து 3 முறை வட்டமிட்ட பிறகு கீழ இறங்கி வந்தனர். விழாவில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அர்ஜூனன் விரதம் இருந்தவர் குழந்தை வரம் அளித்தார். பின்னர் அம்மன் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story