காரிமங்கலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு


காரிமங்கலம் அருகே  மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 26 April 2022 11:29 PM IST (Updated: 26 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் இறந்தார்.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள கெரகோடஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 22). சம்பவத்தன்று இவர் தனது சகோதரர் பிர்லா போஸ் (24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி சென்றபோது காமராஜ் நகர் பகுதியில் சாலையின் குறுக்கே திடீரென நாய் ஓடியது. அதன் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பியபோது அருகே உள்ள மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயலட்சுமி, பிர்லாபோஸ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story