ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த போது காவிரி ஆற்றில் மூழ்கி வங்கி ஊழியர் சாவு


ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த போது காவிரி ஆற்றில் மூழ்கி வங்கி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 26 April 2022 11:29 PM IST (Updated: 26 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த போது காவிரி ஆற்றில் மூழ்கி வங்கி ஊழியர் இறந்தார்.

பென்னாகரம்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு நந்தினி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மகன் ஜேம்ஸ் பவுல் (வயது22). இவர் அங்குள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தபோது ஜேம்ஸ் பவுல் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வங்கி ஊழியரை தேடினர். அப்போது அவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வங்கி ஊழியரின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story