தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரதாபன், நிர்வாகிகள் பச்சா கவுண்டர், முருகேசன், மாதையன், கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும். மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகளில் இருக்கும் சீமை கரு வேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும். தின ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story