பிளாஸ்டிக் கவர்கள் விற்ற 6 கடைகளுக்கு அபராதம்
வேலூரில் பிளாஸ்டிக் கவர்கள் விற்ற 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், உதவி கமிஷனர் வசந்தி, சுகாதார அலுவலர் லூர்துசாமி ஆகியோர் வேலூர் லாங்குபஜார், சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனையிட்டனர்.
அதில், 6 கடைகளில் 10 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதையடுத்து ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம், 5 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் என்று மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story