பள்ளிக்கு செல்போன் கொண்டு வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


பள்ளிக்கு செல்போன் கொண்டு வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை  கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 April 2022 11:39 PM IST (Updated: 26 April 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கு செல்போன் கொண்டு வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள், பிரிவு உபசார விழாவுக்கு அனுமதி அளிக்காததால் இரும்பு டெஸ்க், பெஞ்சுகளை அடித்து நொறுக்கினர். இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் விசாரணை நடத்தினார். அதில், பள்ளியின் இரும்பு பெஞ்சு, டெஸ்குகளை 10 மாணவர்கள் அடித்து உடைத்ததும், அதனை மற்றொரு மாணவன் செல்போனில் பதிவு செய்ததும் தெரிய வந்தது.

 அதையடுத்து 10 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. அதற்காக மாணவர்கள் செல்போன் பயன்படுத்தி வந்தனர். தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று மாணவர்கள் தலை முடியை சீராக வெட்டி கொண்டு பள்ளிக்கு வரவேண்டும். இதுகுறித்து சலூன் கடைகளுக்கும் மாணவர்களுக்கு எப்படி முடிவெட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படும் என்றார்.

Next Story