‘தின்னர்’ குடித்த சிறுவன் சாவு


‘தின்னர்’ குடித்த சிறுவன் சாவு
x
தினத்தந்தி 26 April 2022 11:56 PM IST (Updated: 26 April 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் என நினைத்து ‘தின்னர்’ குடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மதுரை, 
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் ஹபீஸ்முகம்மது (வயது 9).
இவன் வீட்டில் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த தின்னர் (வர்ணம் பூச பயன்படும்) எனப்படும் ராசாயன திரவத்தை குடிநீர் என்று நினைத்து குடித்து விட்டான். சில நிமிடம் கழித்து வாந்தி எடுத்துள்ளான். அதைக்கண்டு வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து, அவனை உடனே சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் ஹபீஸ்முகம்மது பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சோக சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story