விஷ வண்டுகள் கொட்டி பொதுமக்கள் காயம்
ராணிப்பேட்டை அருகே விஷ வண்டுகள் கொட்டி பொதுமக்கள் காயம் அடைந்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருகே உள்ள தண்டலம் கிராமத்தில், சாலையோரம் உள்ள மரத்தில் இருந்த விஷ வண்டுகள் பொதுமக்களை கொட்டி உள்ளது.
இதில் சிலர் காயமடைந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக வண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் மஹபூப் பேக் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விஷ வண்டு கூட்டின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து முற்றிலுமாக அகற்றினார்கள்.
Related Tags :
Next Story