ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 27 April 2022 12:04 AM IST (Updated: 27 April 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் பதிவு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட பதிவாளர் (நிர்வாக -தணிக்கை) அலுவலகங்கள், ராணிப்பேட்டை பதிவு மாவட்டமாக உருவாக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. 

ராணிப்பேட்டை, சங்கர் நகர், மூன்றாவது குறுக்குத் தெருவில் அலுவலகத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி முதல் பதிவு நடைபெறுவதை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பதிவாளர்கள் அறிவழகன், சக்திவேல், சம்பத், வனிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்ற உறுப்பினர் ஏர்டெல் குமார் மற்றும் பதிவுத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story