விருதுநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு


விருதுநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 27 April 2022 12:06 AM IST (Updated: 27 April 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மற்றும் கள்ளக்காதலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

விருதுநகர், 
விருதுநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மற்றும் கள்ளக்காதலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
திருமணம் 
விருதுநகர் பாண்டியன்நகர் ஏ.ஏ.ரோட்டை சேர்ந்தவர் பாபு (வயது 50). இவருடைய மகள் புவனேசுவரிக்கும் (27), அதே பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழகுவேல், தன் உடன் பிறந்த தம்பி அழகுராஜாவின் மனைவி நந்தினியை கூட்டிக்கொண்டு வெளியூர் சென்றுவிட்டார்.
தற்போது நந்தினி பாண்டியன்நகரில் வேறொரு பகுதியில் வசித்து வருகிறார். புவனேசுவரி, நந்தினியிடம் சென்று தனது கணவரை விட்டுவிட்டும்படி பலமுறை கேட்டுள்ளார். ஆனால் நந்தினி மற்றும் அழகுவேல் ஆகிய இருவரும் சேர்ந்து, “நீ உயிரோடு இருந்தால் நாங்கள் சந்தோஷமாக வாழ முடியாது” என புவனேசுவரியை திட்டியதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை 
 இதனால் மனவேதனை அடைந்த புவனேசுவரி சம்பவத்தன்று, நந்தினி வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பாபு பாண்டியன் நகர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் தனது மகள் புவனேசுவரி தற்கொலைக்கு அழகுவேலுவும், நந்தினியும்தான் காரணம் எனக்கூறியுள்ளார். 
அதன்பேரில் பாண்டியன் நகர் போலீசார், புவனேசுவரியை தற்கொலைக்கு தூண்டியதாக நந்தினி மற்றும் அழகுவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story