நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லத்தை அரசு கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லத்தை அரசு கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.
x
தினத்தந்தி 27 April 2022 12:11 AM IST (Updated: 27 April 2022 12:11 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லத்தை அரசு கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் தட்டாரதெருவில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் கிளை நூலகமாக செயல்பட்டு வருகிறது. 75-வது சுதந்திர போராட்ட தின நினைவு ஆண்டை போற்றும் வகையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலை கல்லூரி வரலாற்றுத்துறை மாணவிகள் நேற்று கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லத்துக்கு வந்து, பார்வையிட்டனர். இவர்களை நூலகர் செல்வம் வரவேற்றார். இவர்களுடன் வரலாற்று துறை பேராசிரியர்கள் பத்மாவதி, அம்பிகா, சத்யபாமா, லட்சுமி, வளர்மதி ஆகியோரும் உடன் வந்து இருந்தனர். நூலகத்தில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நூல்களை வாசித்தும், அவரது தியாகத்தை போற்றி கல்லூரி மாணவிகள் பாடல்களையும் பாடினர்.

Next Story