தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
தேவி கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று மாலை தீ மிதி விழா நடந்தது. இதில் சேந்தமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பரிசோதகராக வேலை பார்த்து வரும் சித்தேஸ்வரன் (வயது 30) என்பவர் தனது 2 குழந்தைகளை தூக்கி கொண்டு தீ மிதித்தார். அவர்கள் திடீரென தவறி தீ குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேந்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதேபோல் காந்திபுரம் மேற்கு வீதியை சேர்ந்த 2 பெண்களும் தவறி தீ குண்டத்தில் விழுந்தனர். அவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story